பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடநெறிகளை முறையாக முடித்த அனைத்து அதிகாரிகளுக்கும்  சான்றிதழ்கள் வழங்கும் விழா கடந்த 9ம் திகதி, பொது முகாமைத்துவ மற்றும் கணக்கியல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களின் தலைமையில் நிலமெதுர வளாகத்தில் நடைபெற்றது.

25 மாவட்ட செயலகங்கள் மற்றும் 332 பிரதேச செயலகங்களை  உள்ளடக்கிய உள்நாட்டலுவல்கள் பிரிவின் அலுவலர்களின் வேண்டுகோளிற்கினங்க நாடுபூராகவும் தொடங்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் முதல் அத்தியாயமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பா மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சிகள் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில்  பங்கேற்ற  மனப்பாங்கு விருத்தி சான்றிதழ் பாடநெறியை முடித்த 93 அதிகாரிகளுக்கும், கொள்முதல் சான்றிதழ் பாடநெறியை முடித்த 88 அதிகாரிகளுக்கும், தகவல் தொலில்நுட்பம் சான்றிதழ் பாடநெறியை முடித்த 41 அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், உள்நாட்டலுவல்கள் பிரிவு 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் "நில மெதுர" வளாகத்தில் தங்கள் கடமைகளைத் தொடங்கியது.

இந்நிகழ்வில் பொது முகாமைத்துவ மற்றும் கணக்கியல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் இராஜாங்க செயலாளர் திரு. எஸ்.பி.விஜயபந்து, கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு.சுணில் கண்ணங்கர உட்பட உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், பொதுச் சேவையின் உறுதிமொழிகள் அனைத்து அதிகாரிகளாலும் உறுதியளிக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து மத அனுசரிப்புகளும் நடைபெற்றன.

 

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய அமைச்சராக கௌரவ ஜனக பண்டார தென்னகோன் சமீபத்தில் நில மெதுர அமைச்சக வளாகத்தில் தனது கடமைகளைத் தொடங்கினார்.

பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிஇ உள்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் காமினி செனவிரத்ன மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

new-min-01

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி, நில மெதுர அமைச்சக வளாகத்தில் தனது கடமைகளைத் தொடங்கினார்.

new-sec-07

இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தப்படும் "சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகள்" என்ற கருப்பொருளின் கீழ், 2017 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட  அறிக்கைக்கு, 2019 இல் நடைபெற்ற போட்டியில் அமைச்சுகளுக்கிடையில்  உள்நாட்டலுவல்கள் அமைச்சு முதலிடம் பெற்றது.

சான்றிதழ் வழங்கும் வைபவம் 25.10.2016 அன்று பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சான்றிதழை பெற்றுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தலைமை நிதி அதிகாரி டாக்டர் தாரக லியானபதிரண மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கணக்காளர் திருமதி டபிள்யூ.ஏ.என் சதுரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

annual-first-place-prize-giving-2017

FaLang translation system by Faboba