கெளரவ. வஜிர அபேவர்தன
உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

உள்நாட்டலுவல்கள் அமைச்சு என்பது இந்நாட்டிலுள்ள விசேடமானதும் முக்கியமானதுமான ஒரு அமைச்சாகக் காணப்படுகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.நாடு பூராகவும் பரந்து விரிந்த நிருவாகக் கட்டமைப்பையும் வலையமைப்பையும் கொண்ட இவ்வமைச்சினூடாக மாவட்ட, பிரதேச, கிராமிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பாரிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.அவ்வாறே, அபிவிருத்திச் செயற்பாடுகளது நன்மைகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்லும் செயற்பாட்டிலும் இவ்வமைச்சு பாரியளவில் பங்களிப்புச் செய்கின்றது.

பொதுமக்களது இறைமை பேணப்படும் வகையில் நல்லாட்சியின் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களை அரசாங்கத்தினது திட்டங்களிலும் தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டிலும் பங்கேற்கச் செய்தல் மற்றும் மாவட்டச் செயலகங்களில் பொதுமக்களது தேவைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி பக்கச்சார்பின்றி அவர்களது தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடு என்பன இவ்வமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளான, அரசியலமைப்புத் திருத்தம், மாவட்ட மற்றும் பிரதேச நிருவாகத்தினை மிகவும் வினைத்திறனாகவும், உற்பத்திறனாகவும், நடைமுறைரீதியாக திட்டமிட்டு செயற்படுத்துவதற்குரிய பிரதான பொறுப்பு முன்னணி அமைச்சான உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கே வழங்கப்பட்டுள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டிற்கு பொருந்துகின்ற வகையில் புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நிதிக் கொள்கைகளுக்கமைய செயற்பட்டு பொதுமக்களது வரிப்பணத்தைச் செலவிடும் விதம் மற்றும் அதன் செயற்றினை மதிப்பிடுவதற்கு இயலுமானவகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தலும் இவ்வமைச்சின் முக்கிய செயற்பாடாகும். இத்தகைய அறிக்கைகளை பொதுமக்கள் அறியச் செய்வதன் மூலம், நாம் பொறுப்புடனும், பாராபட்சமின்றியும், வினைத்திறனுடனும், விளைதிறனுடனும் செயற்படுகின்றோமா என்பது தொடர்பிலான மக்களது தகவல் அறியும் உரிமையையும் உறுதிப்படுத்துகின்றோம்.

FaLang translation system by Faboba