திரு. நீல் டி அல்விஸ்
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பிரதான நோக்கங்கள், செயற்பணிகள், குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, புதியதொரு அமைச்சாக உருவாகியுள்ள நாம், அரசாங்கத்தினது மூலோபாயத் திட்டங்களை முன்னிலைப்படுத்தி, புதிய பாதையொன்றைத் திறந்து, மக்களை நோக்கமாகக் கொண்ட அரச சேவையை வழங்குவதற்கென எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

கடந்த வருடம் முழுவதும் அரச துறையில் பல்வேறு செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக அனைவராலும் வழங்கப்பட்ட உயரிய சேவைகளைப் பாராட்டுதல் வேண்டும். அவ்வகையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வருகின்ற பதிவாளர் நாயகம் திணைக்களம், மவாட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் காரியாலயங்கள் மூலமாக சிறந்த பங்களிப்பு வழங்கப்பட்டதை நன்றியுணர்வுடன் இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள பதிவாளர் நாயகம் திணைக்களமும், மாவட்டச் செயலகங்களும், பிரதேச செயலகங்களும் மக்கள் சேவைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளன. அவை, இருபத்தோராம் நூற்றாண்டிற்குப் பொருத்தமான வகையில் பொதுமக்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு, தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி தமது சேவைகளையும் வழங்குகின்றன.

இதுவரை நாம் கடந்து வந்த பாதையில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் காலங்களிலும் பொதுமக்களுக்கு வினைத்திறனான, விளைதிறனான அரச சேவையை வழங்குவதற்கு, 2015 சனவரி தொடக்கம் 'உள்நாட்டலுவல்கள் அமைச்சு' என்ற பெயரில், நாட்டினது நிருவாகக் கட்டமைப்பு, நல்லாட்சி, அபிவிருத்திக்கு எமது அமைச்சினது உயரிய பங்களிப்பை வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக நல்லாட்சியின் எண்ணக்கருக்களை விதைத்து உயரிய பலனைப் பெற்றுக் கொள்ளும் நாளைய தினத்திற்கென நாம் எம்மை அர்ப்பணிப்போம்.

FaLang translation system by Faboba