பிரிவின் விடயப் பரப்பெல்லை


பணியாட்தொகுதியினரை ஊக்கமூட்டும் காரணியாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை திறமையாகவும், பயனுறுதித்தன்மை வாய்ந்த வகையிலும் அபிவிருத்தி செய்வதனை உறுதிப்படுத்துவதனைப் போன்றே பொது மக்களுக்கு தரமான உற்பத்தி மற்றும் சேவையினை வழங்கும் வகையில் ஊழியர்களுக்கு வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்குதல் மற்றும் இரு தரப்பினருக்கும் எளிதானதும் உற்பத்தித்திறன் மற்றும் சேவைகளை வழங்கும் சூழலை ஏற்படுத்துவதற்குமான வசதிகளை வழங்குவதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியுமாகவுள்ளது.அபிவிருத்திப் பிரிவின் மூலம் நிறைவேற்றுப்படும் பணிகள்

 

 1. கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பான பெறுகை முகாமைத்துவம்.
 2. கட்டிட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலதனச் செலவுகள் செலவுத் தலைப்பின் கீழ் வருடாந்த பெறுகைத் திட்டங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அத் திட்டங்களுக்கு ஏற்ப மாவட்ட செயலகங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
 3. கட்டிட நிர்மாண செலவுத் தலைப்புக்களினால் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அவசியப்படும் வழிகாட்டலுடன் இச்செயற்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 4. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் மூலதனச் சொத்துக்களை மறுசீரமைப்புச் செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக வருடாந்த செயற்திட்டத்தை தயாரித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளல். கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை உச்சளவு மற்றும் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக அந் நடவடிக்கைகளினதும் முன்னேற்றத்தை கண்காணித்தல்.
 5. பணத்திற்கான மதிப்பை உறுதிசெய்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் அரச பெறுகை நடைமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்துவதன் மூலம் மொத்த கட்டுமானத்திற்கான மதிப்பீடு ரூபா. 100 மில்லியனுக்கும் அதிகமான கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு உரித்தான ஒப்பந்தங்களுடன் சம்பந்தப்பட்ட தற்கால மற்றும் தரமான பெறுகை நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.
  1. கட்டிட நிர்மாணங்கள் குறித்த நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை விஞ்ஞாபனங்களைத் தயாரித்தல் ( வரைவுகள் மற்றும் சமர்ப்பிப்புக்கள்).

  2. அமைச்சரவையினால் நியமிக்கப்படும் பெறுகைக் குழு, அமைச்சின் பெறுகைக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக் கூட்டங்களை நடாத்துதல் மற்றும் பெறுகை நிறுவனங்களாக இவற்றுக்கு ஒத்திசைவான குழுக்களுடன் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளல்.

  3. கூட்டங்களை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் பெறுகைக் கடித ஆவணங்களைத தயாரித்தல்.

  4. செயல்பாடுகளை தங்குதடையின்றி வினைத்திறனுடன் மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் அவ்வாறான பெறுகைக முன்னேற்றங்களைப் பெறுதல் மற்றும் கண்காணித்தல்.

 6. அபிவிருத்திப் பிரிவினைப் போன்றே மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களால் நேரடியாக செயல்படுத்தப்படும் அல்லது கையளாப்படும் கட்டுமான நிர்மாணப் பணிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள், பெறுகை அறிக்கைகள் மற்றும் வேறு தகவல்கள் பொதுத் திறைசேரி, நிதியமைச்சு, சனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் செயலகம் போன்ற முகவர் நிலையங்களுக்கு சமர்ப்பித்தல்.
 7. 7. பெறுகை நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை திட்டமிடும் போது பரிசீழிக்கப்பட வேண்டிய, கட்டிடங்களுக்கும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்குரிய நிர்மாணப் பணிகளின் அவசியப்பாட்டினை மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் பெற்றுக்கொள்ளல் மற்றும் அவற்றினை மதிப்பீடு செய்தல்.
 8. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரித்தான நடவடிக்கைகளை முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
 9. மூலதனச் செயற்திட்டங்களுக்கு உரித்தான அரச முதலீட்டுத் திட்டங்ளை செயற்படுத்துதல்.
 10. நில செவனத் திட்டத்தின் கட்டுமானங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்தல்.
 11. மாண்புமிகு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் நில மெஹவர திட்டத்தை செயற்படுத்துதல்.
 12. கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரித்தான விடயங்களை கலந்துரையாடுதல் மற்றும் முடிவுகளை சமர்ப்பிப்பதற்காக பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பான மன்றங்களை நடாத்துதல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
 

  
மேலதிகச் செயலாளர்

தொலைபேசி : +94 115 999 625
தொலைநகல் +94 113 697 270
மின்னஞ்சல் :  இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 

 
சிரேஸ்ட உதவிச் செயலாளர்

தொலைபேசி : +94 115 999 645
தொலைநகல் +94 113 697 270
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


திரு. ஆர்.ஆர்.எம்.டீ.என். பம்பரதெனிய
உதவி செயலாளர்

தொலைபேசி : +94 115 999 626
தொலைநகல் : +94 113 697 270
கைபேசி : +94 718 620 343
மின்னஞ்சல் :  இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

திருமதி. ஏ.டப்லியு.ஏ.சி.என்.கே.அபேகுணசேகர 
உதவி திட்டமிடல் பணிப்பாளர்

தொலைபேசி : +94 115 999 635
தொலைநகல் +94 113 697 270
மின்னஞ்சல் :

FaLang translation system by Faboba