பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், உள்நாட்டலுவல்கள் பிரிவு 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் "நில மெதுர" வளாகத்தில் தங்கள் கடமைகளைத் தொடங்கியது.
இந்நிகழ்வில் பொது முகாமைத்துவ மற்றும் கணக்கியல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் இராஜாங்க செயலாளர் திரு. எஸ்.பி.விஜயபந்து, கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு.சுணில் கண்ணங்கர உட்பட உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், பொதுச் சேவையின் உறுதிமொழிகள் அனைத்து அதிகாரிகளாலும் உறுதியளிக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து மத அனுசரிப்புகளும் நடைபெற்றன.