பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடநெறிகளை முறையாக முடித்த அனைத்து அதிகாரிகளுக்கும்  சான்றிதழ்கள் வழங்கும் விழா கடந்த 9ம் திகதி, பொது முகாமைத்துவ மற்றும் கணக்கியல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களின் தலைமையில் நிலமெதுர வளாகத்தில் நடைபெற்றது.

25 மாவட்ட செயலகங்கள் மற்றும் 332 பிரதேச செயலகங்களை  உள்ளடக்கிய உள்நாட்டலுவல்கள் பிரிவின் அலுவலர்களின் வேண்டுகோளிற்கினங்க நாடுபூராகவும் தொடங்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் முதல் அத்தியாயமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பா மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சிகள் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில்  பங்கேற்ற  மனப்பாங்கு விருத்தி சான்றிதழ் பாடநெறியை முடித்த 93 அதிகாரிகளுக்கும், கொள்முதல் சான்றிதழ் பாடநெறியை முடித்த 88 அதிகாரிகளுக்கும், தகவல் தொலில்நுட்பம் சான்றிதழ் பாடநெறியை முடித்த 41 அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

FaLang translation system by Faboba