- நிறுவன தகவல்கள்
- அமைப்புசார் தகவல்கள்
- செயல்பாட்டு தகவல்கள்
- முடிவுகள் மற்றும் சட்டங்கள்
- அரச சேவை தகவல்கள்
- வரவு செலவுத் திட்ட தகவல்கள்
- திறந்த கூட்டங்களின் தகவல்கள்
- முடிவெடுத்தல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
- மானியம் பற்றிய தகவல்கள்
- அரச கொள்முதல் தகவல்கள்
- பட்டியல்கள், பதிவுகள், தரவுத்தளங்கள்
- நடைபெற்ற தகவல் பற்றிய தகவல்கள்
- வெளியீடுகள் பற்றிய தகவல்கள்
- தகவலறியும் உரிமை தகவல்கள்
- ஏனைய தகவல்கள்
சமீபத்திய சுற்றறிக்கைகள்
விஷேட அறிவிப்புகள்
புலமைபரிசில்கள்
பரீட்சை முடிவுகள்
Uncategorised
எங்கள் புதிய கட்டிடத்திற்கு வருகை தரவும்
(14 வது மாடி, "நிலா மெதுரா", எல்விடிகல மாவத்தை நரஹன்பிடா, கொழும்பு- 05)
சுற்றுலா விடுதிகளின் முன்பதிவுக்காக.
0112050332
Circuit bungalows of the Home Affairs Division
This page is under construction
Ministries
Departments
- Department of Census and Statistics
- Auditor General Department
- Department of Pensions
- Department of Immigration and Emigration
- Department of Registration of Persons
Commissions
Institutions
-
Overview
-
Stay Connected
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 1933/13 மற்றும் 2015 செப்டெம்பர் 21ஆந் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தாபிக்கப்பட்டுள்ளது. சிவில் நிருவாகத்தினது கேந்திர நிலையமாக இது காணப்படுவதுடன் இவ்வமைச்சின் கீழ் மாவட்ட நிருவாகம், பிரதேச நிருவாகம், கிராம நிருவாகம், சிவில் பதிவுகள் என்பன இடம்பெறுவதுடன் பொதுமக்கள் நலனோம்பலுடன் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்குப் போதிய வசதிகளைச் செய்து கொடுத்தல் மற்றும் ஏனைய அமைச்சுக்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பன இவ்வமைச்சின் முக்கிய செயற்பாடுகளாகும். அதனடிப்படையில், அரசினது தேசிய கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து சமூக, பொருளாதார அபிவிருத்திகளை நோக்கமாகக் கொண்டு அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், மனிதவள முகாமைத்துவம், நிறுவன ரீதியான அபிவிருத்தி, இலத்திரனியல் தொழிநுட்ப முறைகளது பயன்பாடு மற்றும் நல்லாட்சி ஆகிய பல்துறை சார்ந்ததாக இவ்வமைச்சின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நோக்கு
தேசத்தின் நலனுக்காக மிகச்சிறந்த சேவைகளை வழங்குதல்
செயற்பணி
திறன்மிக்க மனித வளங்களைப் பயன்படுத்தி சிறந்த நிருவாக முறைமையினூடாக தேசிய, பிரதேச மட்டத்தில் மிகச்சிறந்த சேவைகளை உறுதிப்படுத்துதல்.
குறிக்கோள்கள்
- பொதுமக்களுக்கு மிகவும் அண்மித்த வகையில் பங்குபற்றல் அபிவிருத்தி அணுகுமுறையைக் கொண்ட மாவட்ட, பிரதேச, கிராம நிருவாகப் பொறிமுறையொன்றைத் தாபித்தல்.
- கிராமிய, பிரதேச மற்றும் மொத்த பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பங்கேற்புடன் கூடிய ஒருங்கிணந்த அணுகுமுறையைத் தாபித்தல்.
- ஒருங்கிணைந்த அணுகுமுறையினூடாக பொதுமக்களுக்கு அருகிலிருந்து அரச சேவைகளை வழங்குதலும் அதனை நடைமுறைப்படுத்தலும்.
- நவீன தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வசதிகளை விரிவுபடுத்துவதனூடாக மாவட்ட, பிரதேச, கிராமிய நிருவாகத்தை வலுப்படுத்துதல்.
- வினைத்திறனாகவும் உற்பத்தித்திறன் மிக்கதாகவும் மனிதவளங்களை ஊக்கப்படுத்துதல்.
உபாயங்கள்
- பொதுமக்கள் மட்டில் கொண்டுள்ள பொறுப்பினையும் அவர்களது திருப்தியையும் உறுதிப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் நிறுவனக் கட்டமைப்புக்களை இலகுபடுத்துதலும் அவற்றை மீள நிர்ணயித்தலும்.
- அனைத்து மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பனவற்றை ஒரே கூரையின் கீழ் வலையமைத்தல்.
- சேவைபெறுநர்கள் விரும்பத்தக்கதும் அவர்களுக்கு பதில் அளிக்கக்கூடிய விதத்திலுமான அலுவலகச் சூழலை விருத்தி செய்தல்.
- ஆரோக்கியமான மேம்பாடுடைய சூழலொன்றில் கவர்ச்சிகரமான கொடுப்பனவு நடைமுறையொன்றை உருவாக்கி அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலுள்ள ஊழியர்களை வலுப்படுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்துதல்.
பிரதான செயற்பாடுகள்
- உள்நாட்டலுவல்கள் விடயப்பரப்பு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம், அனைத்து மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களது விடயப்பரப்பிற்கு உரித்தான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களை உருவாக்குதல், பின்னூட்டல் மற்றும் மதிப்பீடுசெய்தல்.
- அரச விழாக்களை ஒழுங்குசெய்தல்.
- கிராமிய இராச்சிய கேந்திரங்களது எல்லைகளை வரையறுத்தல்.
- கிராமிய இராச்சிய கேந்திர சபைகளை தாபித்தல்.
- மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களைத் தாபித்தல்.
- பிறப்பு, விவாகம், இறப்புப் பதிவுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- பதிவாளர் நாயகத் திணைக்களம், அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து விடயப்பரப்புக்களுடனும் தொடர்புடைய நடவடிக்கைகள்.
- பதிவாளர் நாயகத் திணைக்களம், மாவட்டச்செயலகங்கள், பிரதேசசெயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்களை மேற்பார்வை செய்தல்.