அருகம்பே நகரத்தை நோக்கி பயணிக்க எதிர்பார்ப்பவர்களுக்கு, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அருகம்பே சுற்று பங்களா வழியாக, மலிவு விலையில் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் பிற வசதிகளை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு.
| அறை எண் | 1 | 2 | 3 | 4 |
| வசதிகள் | Non AC | Non AC | Non AC | Non AC |
| வருகைதரக்கூடியவர்களின் எண்ணிக்கை | 3 | 2 | 3 | 3 |
| அரசு அதிகாரிகள் / ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு | Rs. 720 | Rs. 720 | Rs. 720 | Rs. 720 |
| அரை அரசு அதிகாரிகள் / அரசு வங்கி அதிகாரிகள் | Rs. 1080 | Rs.1080 | Rs.1080 | Rs.1080 |
- சுற்றுலா விடுதி முன்பதிவுக்கான விண்ணப்பம்
விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
சுற்றுலா பங்களாக்களை முன்பதிவு செய்து கொள்வது எவ்வாறு
- இந்த சுற்றுலா பங்களாக்களை (Circuit Bungalow) முன்பதிவு செய்யும் சலுகையானது அரச துறை உத்தியோகத்தர்கள் / அரச சார்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள், அத்துடன் பாதுகாப்புப் படையினருக்கு (இராணுவம், பொலிஸ், சிவில் பாதுகாப்பு) மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற்கொள்ளுங்கள்.
- உங்கள் விண்ணப்பத் திகதியிலிருந்து, நீங்கள் தங்குவதற்குச் செல்லும் திகதிக்கு 30 நாட்களுக்கு (ஒரு மாதத்திற்கு) முன்னதாக சுற்றுலா பங்களாக்களை முன்பதிவு செய்யலாம்.
- விசாரணைத் தொலைபேசி இல - +94 112 691 073
சுற்றுலா பங்களாவில் தங்கும் நீங்கள் பின்வரும் விடயங்களுக்கு முன்னுரிமையையும் கவனத்தையும் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
- விண்ணப்பதாரரே சுற்றுலா பங்களாவில் தங்க வேண்டும் என்பதுடன், சுற்றுலா பங்களாவில் தங்கியிருக்கும் போது, உத்தியோகபூர்வ அடையாள அட்டை, அமைச்சு/மாவட்ட செயலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் பிரதி மற்றும் பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் மூலப் பிரதி என்பவற்றை சுற்றுலா பங்களா பொறுப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாத நபர்களுக்குத் தங்குமிடத்தை வழங்க வேண்டாம் என்று சுற்றுலா பங்களா பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிடப்படாத எவரையும் சுற்றுலா பங்களாவில் தங்க அழைத்து வரக்கூடாது.
- விண்ணப்பதாரர் இன்றி தங்குமிடத்திற்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.
- அமைச்சின் கடமைத் தேவை ஏற்படும் பட்சத்தில், குறுகிய அறிவித்தலில் இந்த முன்பதிவை இரத்துச் செய்யும் அடிப்படையில் சுற்றுலா பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பத்தில் செலுத்தப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படும்.
- விண்ணப்பதாரரின் காரணம் (தவறு) நிமித்தம் சுற்றுலா பங்களாவைப் பயன்படுத்த முடியாவிட்டால், செலுத்தப்பட்ட பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது அல்லது வேறு திகதி வழங்கப்பட மாட்டாது.
- முன்பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவமானது எந்தவொரு காரணத்திற்காகவும் வேறொரு விண்ணப்பதாரருக்கு மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.
- விண்ணப்பதாரர் தன்னுடன் தங்குபவரின் அடையாளத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன், தங்குமிடக் காலப்பகுதியில் அது தொடர்பான அனைத்துப் பொறுப்புக்களையும் விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
- படுக்கை விரிப்புகள், துவாலை, தலையணை உறைகள் மற்றும் உணவு, பானங்களுக்கான கட்டணங்களை பொறுப்பாளரிடம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் பானங்களைப் பெறும்போது, சுற்றுலா பங்களா பொறுப்பாளரிடம் இருந்து பட்டியலைக் கேட்டு, அதற்கேற்ப உரிய பணத்தைச் செலுத்த வேண்டும். சுற்றுலா பங்களா தங்குமிடத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்காகவும் முறைப்படியான (உத்தியோகபூர்வமான) பற்றுச்சீட்டுப் பெறப்பட வேண்டும்.
- சுற்றுலா பங்களாவில் தங்கியிருக்கும் காலத்தில் உள்ளே அல்லது வெளியே எதற்கும் சேதம் விளைவிக்கப்படக் கூடாது. அத்தகைய இழப்பு அல்லது சேதம் ஏற்படும் பட்சத்தில், அதனைச் சீர்செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் நீங்களே ஏற்க வேண்டும்.
- இந்த சுற்றுலா பங்களாவில் மதுபானம் பயன்படுத்துதல் மற்றும் புகைபிடித்தல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
- • சுற்றுலா பங்களா தங்குமிடத்தில் நீங்கள் தங்கியிருக்கும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் நடவடிக்கை குறித்து உங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டால், எதிர்காலத்தில் உங்களுடையதும் உங்கள் குடும்பத்தினரதும் சுற்றுலா பங்களா தங்குமிட ஒதுக்கீடு கோரும் பட்சத்தில் விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது.
இந்த சுற்றுலா பங்களாவில் இருந்து நீங்கள் செல்லக்கூடிய இடங்கள்
| பார்வையிட வேண்டிய இடங்கள் | சுற்றுலா பங்களாவிலிருந்து தூரம் | |
| அருகம் விரிகுடா கடற்கரை | 1.5 Km | ![]() |
| முஹுது மகா விஹார | 1.5 Km | ![]() |
| மகுல் மகா விஹார | 11 Km | ![]() |
| குமண தேசிய பூங்கா | 39 Km | ![]() |
| ஒகந்தமலை முருகன் கோவில் (ஒகந்த கோவில்) | 39 Km | ![]() |
| குடும்பிகலா மடாலயம் | 39 Km | ![]() |
| தீகவாபி ஸ்தூபி | 40 Km | ![]() |
| நீலகிரி சேயா | 13 Km | ![]() |
| ராஜகலதென்ன | 35 Km | ![]() |














