இலங்கை நிர்வாக கட்டமைப்பில் மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலகர் பிரிவுகள் அடங்குகின்றன. அக்கட்டமைப்பில் 9 மாகாணங்களும் 25 மாவட்டங்களும் உள்ளடக்கப்படுவதுடன் மாகாணங்களில் பல மாவட்டங்கள் உள்ளடக்கப்ட்டிருப்பதுடன் ஒவ்வொரு மாவட்டதிட்கும் பொறுப்பாக மாவட்ட செயலாளர்கள் விளங்குவதுடன் அவர்களின் கீழ் பிரதேச செயலகங்களும் கிராம அலுவலகர் பிரிவுகளுமாக நிர்வாகம் பண்முகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பாராளுமன்ற தீர்மான்களின் படி ஒன்று சேர்க்கவோ பிரிக்கவோ முடியும்.
மாவட்டச் செயலகங்களின் உத்தியோகப்பூர்வ இணைய நுழைவாயிலை பார்வையிடவும்
கொழும்பு மாவட்டம்
மேல் மாகாணத்தின் பிரதான மாவட்டமாக விளங்குகின்ற கொழும்பு மாவட்டம், 675 சதுர கி.மீ. கொண்டுள்ளது. இது, வடக்கே களனி கங்கையும், தெற்கே பாணந்துறை பொல்கொடை கங்கையும், மேற்கே கடற்கரையும், கிழக்கே சப்ரகமுவ மாகாண எல்லைகளையும் நிர்ணயமாகக் கொண்டு அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரம் அமைந்துள்ள பிரதான மாவட்டமாக விளங்குகின்ற இம் மாவட்டத்தில் 2,309,199 சனத்தொகையினர் வசித்து வருவதுடன், 13 பிரதேச செயலகப் பிரிவுகளும், 13 தேர்தல் பிரிவுகளும், 15 உள்ளூராட்சி நிறுவனங்களும் காணப்படுகின்றன. அரசாங்க அமைச்சுக்களின் பணிகளை மாவட்ட மட்டத்தில் செயலுருப்படுத்துவது கொழும்பு மாவட்டச் செயலகத்தின் பிரதான பணியாக விளங்குவதுடன், மேல் மாகாண சபையுடனும் நேரடியாக தொடர்புகளைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் போன்றே பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் நலன்புரி பணிகள் என்பன அமைச்சுக்களில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற ஒதுக்கீடுகளினூடாக மேற்கொள்ளப்படுவதுடன், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பயனுறுதி வாய்ந்த முறையில் மேம்படுத்துவதே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற கொழும்பு மாவட்ட இணைந்த திட்டத்தினதும் பிரதான நோக்கமாகும்.
கம்பஹா மாவட்டம்
1978 செப்டம்பர் மாதம் 07 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் புதிய மாவட்டம் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது கொழும்பு மாவட்டத்தை மீளப் பிரித்து வேறாக்கப்பட்ட நிர்வாகப் பிரதேசமொன்றாகும். கம்பஹா பென்டியமுல்லை பிரதேசத்தின் அக்ரா கட்டிடத்தில் இயங்குகின்ற மாவட்டச் செயலகத்தை தலைமையகமாக கொண்டு வடக்கே மா ஓயா, (குருனாகலை மற்றும் புத்தளம் மாவட்ட) கிழக்கே 100-200 மீற்றர் உயரத்தில் பரந்துபட்டுள்ள வரம்புகள் மற்றும் பள்ளத்தாக்குகளையும் (கேகாலை மாவட்டம்), தெற்கே களனி கங்கை எல்லைகளான கொழும்பு மாவட்டத்தையும், மேற்கே இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டு 45 கிலோ மீற்றர் நீளம் மற்றும் அகலத்தைக்கொண்ட சதுர வடிவமான நிலப்பரப்பாக இது அமைந்துள்ளது.
கலாசார, அரசியல் மற்றும் கல்விசார் துறைகளில் கம்பஹா மாவட்டம் தனியிடம் பிடித்துள்ளது. நாட்டின் தலைநகருக்கும், சர்வதேச துறைமுகத்திற்கும் முகத்திடலாக அமைந்துள்ள கம்பஹா மாவட்டம் தொழிற்சாலைகளை கேந்திரம மையமாகக் கொண்டு சதந்திர வர்த்தக வலயம், சுற்றுலா வர்த்தகம் தொடர்பாவும் சர்வசே விமான நிலையம், புகையிரத நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்று மின்வலு மற்றும் தொலைபேசி வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
கம்பஹா நிர்வாக மாவட்டம், 1,387 சதுர கி.மீ (139,140 ஹெக்ரயார்) நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தைப் போன்று இரு மடங்கு விசாலமானதாகும். மேல் மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 38% மற்றும் இலங்கை நிலப்பரப்பில் 2.1% இம்மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. வடக்கே 6° 54.5' மற்றும் 7° 20' அகலக் கோட்டுக்கும், கிழக்கே 79° 48.75' மற்றும் 80° 13' நெடுங் கோட்டுக்கும் இடையே அமைந்துள்ளது.
இம் மாவட்டம் ஆகக் குறைந்த 21.6°C வெப்பநிலையையும், ஆகக் கூடிய 37°C வெப்பநிலையையும், 1750 மி.லீ. மழைவீழ்ச்சியையும், (சேனரத்கொட 2.477 மி.லீ.) கொண்ட வெப்ப மற்றும் ஈர வலய காலநிலையைக் கொண்ட நிலப் பகுதியொன்றாகும். பருவப் பெயர்ச்சிக் காற்று மற்றும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலப்பகுதியிலேயே மழை கிடைக்கின்றது. ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலான காலம் பூராகவும் மாவட்டத்தில் வரண்ட காலநிலை நிலவுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் காணப்படுகின்ற ஈரவலய தாவரங்களையும், சதுப்பு நிலத்தை அண்டிய கண்டல் தாவரங்களும் காணப்படுகின்றன.
களுத்துறை மாவட்டம்
மேல் மாகாணத்தில் அமைந்துள்ள களுத்துறை மாவட்டத்தின் அமைவிடத்தை ஒப்பு நோக்கும் போது வடக்கே கொழும்பு மாவட்டமும், கிழக்கே இரத்தினபுரி மாவட்டமும், தெற்கே காலி மாவட்டமும், மேற்கே சமுத்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளன. அதன் தனி அமைவிடம் ழுமுமையாக வடக்கே 6⁰ 19' 30" அகலக் கோட்டுக்கும், கிழக்கே 79° 51' 30" - 80° 22' 45" நெடுங்கோட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இரண்டு கோரளைகள், எட்டு பத்துக்கள் மற்றும் இரண்டு தொட்டமுனுக்கள் என்பவற்றைக் கொண்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் கிழக்கு எல்லை மத்திய மலைநாட்டின் கீழாக இரண்டு மலைத்தொடர்களுடன் இணைகின்ற பல சிறு குன்றுகளையும், மேடு பள்ளமும், மத்திய மற்றும் மேற்குப் பகுதிகள் பெரும்பாலும் சமவெளிகளையும் கொண்டுள்ளது. கிழக்கு எல்லையில் ஆரம்பமாகின்ற களுகங்கை மற்றும் பெந்தரை கங்கையையும், கிளை நதியாகிய ஹிக் கங்கை மற்றும் குடா கங்கை மற்றும் மாவக் ஓயா பிரதான வடிகாலமைப்பு எல்லையில் கிழக்கு எல்லையில் ஆரம்பிக்கும் பெநதரை கங்கயைம், கிளை நதியாகிய ஹக் மற்றும் குடா நதிகளும் மாவக் ஓயாவும், வடிகாலமைப்பு முறைகளை நிர்ணயிக்கின்றன.
மாவட்டத்தின் நலப்பயன்பாட்டில் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்த இறப்பர் பயிர்செய்கையின் வீழ்ச்சியுடன் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிக்கென வரையறுக்கப்பட்டிருந்த தேயிலை பயிர்செய்கை மாவட்டம் பூராவும் பரந்துபட்டுக் காணப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக தென்னை, கறுவா, மிளகு போன்ற ஏற்றுமதிப் பயிர்கள் மத்திய பகுதியில் காணப்படுகின்றன. சமவெளிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை வியாபித்துக் காணப்படுவதுடன், மாவட்டத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிங்கராஜ வனம் வனாந்தரமாக காட்சியளிக்கின்றது.
வரலாற்றுப் பெறுமானங்கள் நிறைந்து கிடக்கும் இடுபாடுகளிடையே புலத்சிங்கள, பாஹியங்கல அமைந்துள்ள குகை பலாங்கொடை மனிதனின் சமகாலத்தவர்கள் வாழ்ந்ததாக அகழ்வாராச்சிகளின் மூலம் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது பேதிஸ் மன்னனின் காலத்தில் நடப்பட்ட முப்பத்திரண்டு அரசமரச் செடிகளின் ஒன்றாக கருதப்படுகின்ற களுத்துறை விஹாரை மற்றும் தூபி இலங்கைவாழ், பௌத்தர்களினதும், பௌத்தர்கள் அல்லாதோரினதும் பேராதரவைப் பெற்றுத் திகழ்கின்றது.
கண்டி மாவட்டம்
மத்திய மாகாணத்தின் பிரதான மாவட்டமாக விளங்குகின்ற கண்டி மாவட்டம் வடக்கே மாத்தளை மாவட்டத்தையும், கிழக்கே பதுளை மாவட்டத்தையும், தெற்கே நுவரெலியா மாவட்டத்தையும், மேற்கே கேகாலை மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.
மாவட்டத்திற்கே அரியதொரு பொக்கிஷமாகத் திகழ்கின்ற சிவனொளிபாத அடிவாரத்தில் ஊற்றெடுக்கும் மஹாவலி கங்கை பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவின் ஊடாக கங்கவட்ட கோரளை, குண்டசாலை உட பலாத, தொளுவ, உடுநுவர, கட்டிநுவர ஹாரிஸ்பத்துவ, குண்டசாலை மற்றும் மெததும்பர பிரதேச செயலகம் ஊடாக பதுளை மாவட்டத்திற்குள் வந்து கலக்கின்றது. 20 பிரதேச செயலகங்களையும், 17 பிரதேச சபைகளையும், 1188 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
கண்கொள்ளாக் காட்சி தரும் மலைத் தொடர்களையும், பள்ளத்தாக்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ள மத்திய மலைநாடு 1940 சதுர கிலோ மீற்றர் பசுமையான நிலப்பரப்பைக் கொண்டதாகும். மஹாவலி கங்கைக்குள் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் அதிகளவு நீர்த்தாரை வந்து கலந்தவண்ணமுள்ளன. இதற்கு மேலதிகமாக பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் இருந்தே தெதுரு ஓயாவின் மூல நீர்த்தாரை ஊற்றெடுக்க ஆரம்பிக்கின்றது. மாவட்டத்தின் யட்டிநுவர மற்றும் உடுநுவர பிரதேச செயலக பிரிவுகளின் மேற்கு வளைவில் தங்குதடையின்றி ஓடும் நீர்த்தாரை மா ஓயாவின் நீரோட்டத்தில் கலக்கின்றது.
மாத்தளை மாவட்டம்
இலங்கையின் மத்திய பிரதேசமாக கருதப்படுகின்ற மாத்தளை மாவட்டம் 1993.3 சதுர கி.மீ. விஸ்தீரணமுடையதாகும். மத்திய மாகாணத்தின் வட பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மாத்தளை மாவட்டம் வடக்கே அநுராதபுர மாவட்டத்தையும், கிழக்கே பொலன்னறுவை, பதுளை, அம்பாறை மாவட்டங்களையும், தெற்கே கண்டி மாவட்டத்தையும், மேற்கே குருனாகல் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
நாட்டின் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும். உலகில் மிகச் சிறப்பான ஓவியங்களாகப் போற்றப்படுகின்ற சீகிரியாவும், இயற்கையின் பெரும் கொடையாக விளங்குகின்ற நக்கீல்ஸ் மலைத்தொடரும் அமைந்துள்ள இப் பிரதேசம், 11 பிரதேச செயலகங்கள் பரந்துபட்டுக் காணப்படுகின்ற 1373 கிராமங்களைக் கொண்டுள்ளதுடன், இங்கு 04 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மலைநாட்டு முறைமைக்கு உரியதான நைஸ், கிரனைட், கெலிக்னைஸ், ஸ்எடிக் சுண்ணாம்புக்கல் மொலைட் மற்றும் கொன்டலைட் வகையைச் சாரந்த கானட், சிலமனைட், ஷிஸ்ட் மற்றும் கிராபைட் ஆகிய கல் வகைகளையும் மாத்தளை மாவட்டம் தன்னகத்து கொண்டுள்ளது. இங்கு வனாந்தரங்களும் காணப்படுகின்றன. மத்திய தென்மேற்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களில் மலைநாட்டு ஈரவலய வனாந்தரங்களும், வடக்கில் லக்கல - வில்கமுவ பிரதேசங்களில் தாழ்நாட்டு உலர் வலய வனாந்தரங்களும் உள்ளன.
பிரதான பருவப்பெயர்ச்சி காற்று இரண்டின் (2) மூலம் மழை பெறப்புகின்ற போதிலும், வடகிழக்கு பருவப்பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. நக்கீல்ஸ் மலைத் தொடரை அண்டியதாக பரந்த உயிர்ப் பல் வகைமை காணப்படுவது, இந்நாட்டின் அரும் பொக்கிஷமாக கருதப்படுகின்றது. பெரும்பாலும் ஹோட்டன்தென்னவுக்கு நிகராக, எனினும் விசாலமின்றிய பத்தனை நிலம் பிட்டவலையை அண்டியதாகவும், சிறிய உலகமுடிவு அதன் ஒரு மூலையிலும் அமைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டம்
இலங்கையின் கூரை எனப் போற்றப்படுகின்ற நுவரெலியா மாவட்டம் கண்டி, பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு எல்லையில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 900 - 8000 அடி வரை உயரத்தில் வியாபித்துக் காணப்படும் இலங்கையின் அதியுயர்ந்த மலையான பீதுருதாலகால மலை மாத்திரமன்றி கிரிகல்பொத மலை, கொட்டுபொல மலை, கிக்கிலியாமான மலை, கிரேட் வெஸ்டன் மலை, ஹக்கல மலை மற்றும் புனித சிவனொளிபாத மலை ஆகிய மலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவ்வாறே, லக்ஷபான நீர் வீழ்ச்சி, ரம்பொட நீர்வீழ்ச்சி, டெவோன் நீர்வீழ்ச்சி, எல்ஜின் நீர்வீழ்ச்சி, சென்ட் கிளேயர் நீர்வீழ்ச்சி, பேகஸ்கெரடி நீர்வீழ்ச்சி, ஆகியனவும் மஹாவலி, களனி கங்கைகளின் ஆரம்பமும் உள்நாட்டு வெளிநாட்டு பிரசித்திபெற்ற ஹோட்டன்தென்ன அபயபூமியும், ஹக்கல பூங்காவும் இங்கு அமைந்துள்ளமை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவருவதற்கான காரணங்களாயின.
அவ்வாறே இலங்கையின் நீர் மின்வலு உருவாக்கத்திற்கு முன்னுரிமையளிக்கப்படுகின்ற மாவுஸ்ஸகெலே, காஸல்ரீ, கெனியொன், நோர்டன்பிரிஜ், கொத்மலே, ரந்தெனிகலை, ஆகிய நீரத்தேக்கங்களும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பெரும் பகுதியும் நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.
இங்கு வசிக்கின்ற சனத்தொகையில் 57.1% வீதமானோர் இலங்கை தமிழர்களாவதுடன், ஏனையவர்கள் சிங்களம் மற்றும் பிற இனத்தவர்களாவர்.
மாவட்டத்தில் நிலவுகின்ற விசேட காலநிலை விவசாயத்திற்கு உகந்ததாக காணப்படுகின்ற போதிலும் மிகவும் பிரபல்யமடைந்து காணப்படுவது மரக்கறி பயிர்ச் செய்கையாகும். 1741 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணத்தைக் கொண்ட இம் மாவட்டத்தின் சாதாரண மழைவீழ்ச்சி 75 அங். காணப்படுவதுடன், இலங்கையில் அதிகூடிய மழைவீழ்ச்சியைப் பெறுகின்ற பிரதேசமான (வட்டவல) போன்று ஆகக் குறைந்த வெப்பநிலை காணப்படும் பிரதேசமும் (நுவரெலியா) இம் மாவட்டத்தில் காணப்படுது சிறப்பம்சமாகும்.
மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த, கொத்மலை, வலப்பனை, ஆகிய பிரதேசங்கள் இந்நாட்டு மன்னர்களின் பாதுகாப்பு பூமியாக விளங்கியதுடன், அப்போது நிர்மாணிக்கப்பட்ட மஹா ரஜ விஹாரை இன்று வரை பாதுகாப்பாக காணப்படுகின்றது. இதன் வரலாறு இராவணன் ஆட்சி வரை பழங்காலத்தை நோக்கி நீண்டு செல்வதாக புராணக் கதைகளும் வரலாறும் எமக்கு சான்று பகர்கின்றன.
மேற்படி இயல்புகளைக் கொண்ட நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ, நுவரெலியா, ஹங்குரங்கெத்த, கொத்மலை மற்றும் வலப்பளை ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கியுள்ளது.
காலி மாவட்டம்
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள 19 பிரதேச செயலகங்களினதும் பிரதேச நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைக்கும் கேந்திர மையமாக காலி மாவட்டச் செயலகம் விளங்குகின்றது.
தென் மாகாணத்தின் பிரதான நகரமான காலி நகரம் தற்போது மிகப் பிரசித்திபெற்று விளங்குவதுடன் சன அடர்த்தி மிக்க நகரமாகவும், தற்போது துரித கதியில் அபிவிருத்தியடைந்து வருகின்ற ஒரு நகரமாகவும் அது மாற்றமடைந்துள்ளது. 1,091,000 மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். அவர்களது பொருளாதார, சமூக, கலாசார தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கின்ற இணைப்புச் செயற்பாடுகள் மாவட்ட செயலகத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரச துறையிலும் தனியார் துறையிலும் சேவை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கியதான பிரமாண்டமான பல கட்டிடங்களை கேந்திர மையமாக கொண்டு காலி மாவட்டத்தின் இதயத்திற்கு நிகரான காலி மாவட்டச் செயலகம் காலி நகரம் பூராக பிரகாசத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது. காலி கொழும்பு நெடுஞ்சாலையின் பாலி பிரதான பஸ் தரிப்பிடத்துக்கும் காலி பிரதான புகையிர நிலையத்திற்கும் அருகே நவீன வடிவமைப்பில் 7 மாடிகளைக் கொண்ட மாவட்டச் செயலகம் தாபிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தமது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யக்கூடியவாறும், இலகுவாக பிரவேசிக்கக் கூடியவாறும் ஓரிடத்தில் நவீன தொழிநுட்ப முறைகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, துரித கதியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சகல வசதிகளையும் கொண்ட கண்கவர் சேவை வழங்கும் நிறுவனமொன்றாகவும் இது விளங்குகின்றது.
பொது மக்களுக்கு பயனுறுதி வாய்ந்ததும் வினைத்திறன் மிக்கதுமான பல சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதை ஒரே நோக்கமாக கொண்டு மத்திய அரசாங்க மற்றும் மாகாண அரச சேவையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இம் மாவட்ட செயலக வளாகத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகம் ஊடாக மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் மற்றும் அச் சேவைகளை வழங்குவதற்கான காலஎல்லை குறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சேவை பெறுநர் பட்டயம் அலுவலக வளாகத்தின் கீழ்த் தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வேகமாக பணிகள் மேற்கொள்ளப்படுவதனால் ஒவ்வொரு அலுவலரும் பட்டயத்தில் குறிப்பிடப்படுள்ள கால எல்லையினுள் தத்தமது சேவையை வழங்குவதற்கு பின்நிற்க மாட்டார்கள் என்பது உறுதி.
மாத்தறை மாவட்டம்
தென்னிலங்கையின் நில்வளா கங்கைக்கு அருகே கடலின் எல்லையில் அமைந்துள்ள மாத்தறை மாவட்டமானது, ரோஹன நகரின் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள 1285 சதுர கிலோ மீற்றர் அல்லது 128,250 ஹெக்ரயார் நிலப்பரப்பில் வளமான கண்கவர் நிலப்பிரதேசம் ஒன்றாகும்.
வடக்கே 5.8 - 6.4 அகலக் கோட்டுப் பாகைக்கும், கிழக்கே 80.4 - 80.7 நெடுங்கோட்டுப் பாகைக்கும் இடையே அமைந்துள்ள மாத்தறை மாவட்டம் 2553.2 மி.லீ. சாதாரண மழைவீழ்ச்சியையும், 26.7°C சாதாரண வெப்பநிலையையும் கொண்ட உலர்வலய காலநிலையைக் கொண்ட மாவட்டம் ஒன்றாகும்.
இலங்கை மொத்த நிலப்பரப்பில் 1.93% எமது மாவட்டம் கொண்டுள்ளதுடன், தென் மாகாண நிலப்பரப்பில் 23.14% ஆன மொத்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. மாத்தறை மாவட்டம் தெற்குக் கரையோரத்தில் இருந்து வடக்கே 3880 அடி வரை உயரத்தில் அமைந்துள்ளதுடன், வடக்கில் உலக மரபுரிமைகளாகப் போற்றப்படுகின்ற சிங்கராஜ வனம் அழகுமிகு நீர்வீழ்ச்சிகளும் இங்கு காணப்படுகின்றன. தெற்கே கண்கவர் கடற்கரையோரத்தையும் வடக்கே இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன, கலவான பிரதேச செயலகப் பிரிவுகளையும், மேற்கே காலி மாவட்டத்தின் ஹபராதூவ, இமதூவ, யக்கலமுல்ல, தவலம, நெளுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளையும் கிழக்கே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஓகேவல, பெலுஅத்த, பட்டுவன ஆகிய பிரதேச செயலகங்களையும் எல்லைகளாகக் கொண்டு மாத்தறை மாவட்டம் அமைந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
இலங்கையின் தென்கிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விஸ்தீரணம் 2609 சதுர கி.மீ. ஆகும். இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 1/25 ஆகும். மாவட்டத்தின் அதிகூடிய நீளம் 106 கி.மீ. ஆவதுடன் அகலம் 39 கி.மீ. ஆகும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு உரித்தாகின்ற கரையோர நீளம் 151 கி.மீ. ஆகும். இம் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 11.5 உள்ளக நீர்த்தேக்கங்களால் சூழப்பட்டுள்ளது. நில்வளா கங்கைக்கு அருகே கடலின் எல்லையில் அமைந்துள்ள மாத்தறை மாவட்டமானது, வடக்கே 6 - 6.5 அகலக் கோட்டுப் பாகைக்கும், கிழக்கே 80.6 - 81.7 நெடுங்கோட்டுப் பாகைக்கும் இடையே அமைந்துள்ளது.
மாத்தறை மாவட்டம் வடக்கே மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டமும், மேற்கே மாத்தறை மாவட்டமும், தெற்கே இந்து சமுத்திரமும், கிழக்கே இந்து சமுத்திரம் மற்றும் அம்பாறை மாவட்டமும் இம் மாவட்டத்தின் எல்லைகளாகும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள இயற்கையின் பெரும் பொக்கிஷமாக விளங்குகின்ற ஹும்மானய, சூரியவெவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள சுடு நீரூற்று மற்றும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் உயன்கொடை பிரதேசம் ஆகியன இந்நாட்டில் காணப்படும் அரிய புவிச்சரிதவியல் சான்றுகளாகும்.
அம்பலாந்தோட்டைக்கு அப்பால் அமைந்துள்ள மதுனாகல எனும் புகழ்பெற்ற மடாலயத்திற்கு அருகே இந்த சுடுநீர் ஊற்று அமைந்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வடிகான் அமைப்பு தொடர்பாக பிரதான நதிகள் மற்றும் செயற்கை நீர் பாதைகள் 19 அமைக்கப்பட்டுள்ளன. அதனிடையே வளவை கங்கை, கிரிந்தி ஓயா, மானிக்க கங்கை, ஊருபொக்க ஓயா மற்றும் கச்சிகல் ஆர போன்று மாவட்டத்தின் கிழக்கு எல்லைகளாக அமைந்துள்ள கும்புக்கன் ஓயாவும் பிரதான நீர் வழியாகும். நெற்போகம் அல்லது வடகிழக்கு பருவப்பெயர்ச்சிக் காற்று அல்லது வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலப்பகுதியில் (நவம்பர் – மார்ச்) இந் நதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பதுடன் நெற்போகம் அல்லது தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலப்பகுதியில் (செப்தெம்பர்) நீர் மட்டம் கீழிறங்கும். மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களும் 13 உள்ளக உள்ளக நீர்த்தேக்கங்களுள் பெரிய குளமாக ரிதியகம வாவி இருந்த போதிலும், முருதவல மற்றும் லுணுகம்வெஹர ஆகிய நீர்த்தேக்கங்களிலேயே அதிகூடிய நீர்கொள்ளளவு அடங்கியுள்ளது. அதிகளவு வாவிகள் திஸ்ஸமஹாராம பிரதேசத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.
மாவட்டத்தில் பல பிரதான நீர்ப்பாசன உத்தேச திட்டங்கள் கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை உடவளவை அபிவிருத்தி திட்டம், கிரம ஓயா திட்டம், ஊருபொக்க ஓயா திட்டம், லியன்கஸ்தொட்ட திட்டம், ரிதியகம திட்டம், லுணுகம்வெஹர திட்டம், மவ்ஆர திட்டம் கெக்கிஓபட்ட ஆகியனவாகும். மாவட்டத்திலுள்ள விவசாயதிட்டங்களாக மஹகல்வெவ, பத்தகிரிய, பெரகம மற்றும் முருதவெல திட்டம் ஆகியனவற்றை குறிப்பிடலாம்.
யாழ்ப்பாண மாவட்டம்
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டம் கொழும்பில் இருந்து 410 கி.மீ. அப்பால் அமைந்துள்ளது.
யாழ் குடா நாடு மக்கள் வசிக்கூடிய 07 தீவுகளைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் வடக்கே, கிழக்கே மற்றும் மேற்கே எல்லைகளாக இந்து சமுத்திரம் காணப்படுவதுடன் தெற்கே யாழ்ப்பாணக் களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 1012.01 சதுர கி. மீற்றர்களாகும்.
யாழ்ப்பாண மாவட்டம் நான்கு உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை தீவுகள், வலிகாமம், தென்மராச்சி, மற்றும் வடமராச்சி ஆகியனவாகும். மாவட்டம் பூராக 1084 குளங்கள் 2433 அங்குலத்தில் பரந்துபட்டு காணப்படுவதுடன் அவை மழை நீரைச் சேமித்து வைக்கக் கூடியனவாகும். மேலதிக நீர் மிக இலகுவாக கடலுக்குள் / களப்புக்குள் கலந்துவிடுகின்றது. கடல் மட்டத்தில் இருந்து பருத்தித்துறை 15.24 மீ. மைலடி 10.8 மீ, சங்கானை 3.04 மீ. கொக்குவில் 6.09 உயரே அமைந்துள்ளன.
மன்னார் மாவட்டம்
இலங்கையின் வடமேற்குப் பக்கமாக வடக்கு நோக்கி மன்னார் மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தெற்கே புத்தளம் மாவட்டமும், தென் கிழக்கே அநுராதபுர மாவட்டமும், கிழக்கே வவுனியா மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
திருக்கேதீஸ்வரம் கோயில், மருதமடு தேவாலயம், ஓல்லாந்துக் கோட்டை, அல்லி இராணிக் கோட்டை, இராமர் பாலம், வெலிபாலம், பயோபெப் மரம் ஆகியன முக்கியமான இடங்களாக இனங் காணப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாயமாக விசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் காணப்படுகின்றன. 70% விவசாயம், 25% மீன்பிடி, 5% ஏனைய தொழில்களிலும், 61.4% நெற்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 70.5% வீதமான ஆண்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். 35 - 39 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களும், 25-29 வயதிற்கு இடைப்பட்ட பெண்களும் தொழில்களில் ஈடுபட்டு வருவதுடன், 5% எவ்வித தொழில்களிலும் ஈடுபடுவதில்லை.
வவுனியா மாவட்டம்
இம் மாவட்டம் கிழக்கே அநுராதபுர, முல்லைத்தீவு மாவட்டங்களையும், வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியையும், தெற்கே அநுராதபுர மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளன.
பிரபல்யமான ஏ-9 பாதை, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையில் செல்லும் புகையிரதப் பாதையும், கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரை செல்லும் புகையிரதப் பாதையும் இம் மாவட்டத்தை ஊடறுத்துச் செல்கின்றன. கனகராயன் குளம், பாலி கங்கை, பரங்கி கங்கை ஆகிய இரு பிரதான ஆறுகளும் கிளை ஆறுகளும் இம்மாவட்டத்தினூடாக ஓடுகின்றன. நீர்வளமும், நிலவளமும் மிக்க வவுனியா மாவட்டம் பூகோள ரீதியாக சிறியளவிலான படிகக் கற்பாறைகளைக் கொண்டுள்ளன.
இம்மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாய மார்க்கமாக சிறியளவிலான கைத்தொழில்களான ஆடை உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, வியாபாரம் ஆகியன விளங்குகின்றன. தேவைக்கதிகமாக உள்ள பால் உற்பத்தியைக் கொண்டு வேறு அதனுடன் தொடர்புடைய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக பிற மாகாணங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நெற் செய்கையில் இம்மாவட்டம் தன்னிறைவு கண்டுள்ளதுடன், மேலதிகமாக உள்ள நெல் மற்றும் அரிசி என்பன ஏனைய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாவட்டத்தின் ஏனைய பிரதேச நீரோடைகளிலும், ஆறுகளிலும் சிறயளவிலான நன்னீர் மீன்வளர்ப்பு காணப்படுவதுடன், பாரியளவில் கடல் மீன்கள் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து வவுனியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. விவசாயம், சிறியளவிலான கைத்தொழிலான கால்நடை வளர்ப்பு, வியாபாரம் என்பன இம் மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாய மார்க்கமாக விளங்குகின்றன. அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அலுவலர்கள் இம்மாவட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாவர். பல்வேறுபட்ட நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் இம்மாவட்டத்தில் மிகச் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டம்
1979 ஆண்டில் புதிதாக தாபிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமும் ஒன்றாகும். மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் பகுதிகள் உள்ளடங்கும் இப் புதிய மாவட்டம் பிரதானமாக வட மாகாணத்தின் கிழக்குப் பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தையும், தெற்கே திருகோணமலை மாவட்டத்தையும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பகுதிகளையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாவட்டத்தின் நிலப்பரப்பு அண்ணளவாக 25,169 சதுர கி.மீ. ஆவதுடன் (வனாந்தரங்கள் உட்படவும், பாரிய உள்ளக நீர்ப்பகுதிகள் தவிரவும்) அது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 3.8% ஆகும்.
சமதரையான இப் பிரதேசம் வடக்கு மற்றும் கிழக்காக சரிவுகளையும், மேற்காக தெற்கு மற்றும் மேற்கு நோக்கி சரிவுகளும் அமைந்துள்ளன. இப் பிரதேசத்தின் கரையோரம் 70 கி.மீ. ஆவதுடன், கோகிலை, நெய்யாறு, நந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய பிரதேசங்களில் இறால் அதிகளவில் காணப்படும் நான்கு களப்புக்களும் உள்ளன. இம் மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து சாதாரண உயரத்தில் அதாவது 36.5 மீ. இல் அமைந்துள்ளது. பிரதேசத்தில் பயிர்செய்கைக்கு உகந்த சிவப்பு, கபிலம் போன்று சிவப்பு, மஞ்சல் நிற லெட்டோ மண் வகையும் காணப்படுகின்றது.
இம் மாவட்டத்திலுள்ள 251,690 ஹெக்ரயார் காணிகள், புதர் காடுகள் உட்பட விவசாய, தென்னைப் பயிர்செய்கை, குடியிருப்புக்கள் மற்றும் கட்டிடங்கள் இன்னோரன்ன நடவடிக்கைகள் தொடர்பாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் வனாந்தரங்களாக 167,850 ஹெக்ரயார் அதாவது மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 64.1% ஆகும். நீரில் மூழ்கியுள்ள பிரதேசங்கள் மற்றும் தரிசு நிலங்களாக 21,390 ஹெக்ரயார், அதாவது மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.2% வீதமாகவும், விவசாயம் தொடர்பாக 44,040 ஹெக்ராயர் அதாவது மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் 5.1 வீதம் பயன்படுத்தப்படுவதுடன், எஞ்சியுள்ள நிலப்பகுதி குடியுருப்புக்களையும், கட்டிடங்களையும் கொண்டமைந்துள்ளன. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களும், 16 மத்தியளவு நீர்ப்பாசனத் திட்டங்களும் 198 சிறியளவிலான நீர்ப்பாசனத்திட்டங்களும் காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்துடன் இணைந்து காணப்பட்ட கிளிநொச்சிப் பிரதேசம் புதிய மாவட்டம் ஒன்றாக 1984 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 3 ஆந் திகதி நிறுவப்பட்டது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் உள்ள நெல் விற்பனை நிலையத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் முதலாவது மாவட்டம் செயலகம் 1984.02.03 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 1985 ஆண்டில் ஏ-9 பாதையில் மாவட்டச் செயலகம் நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க உருத்திரபுரம் சிவன் கோயில், புளியம் பொக்கானை நாகதம்பிரான் கோயில், மனித்தலை புனித அந்தோனியர் தேவாலயம், பொன்னாவெளி சிவன் கோயில், பூநகர் ஒல்லாந்தர் கோட்டை இயற்கை வளமாக கருதப்படுகின்ற இரணைமடு வாவி, சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம், கௌதாரிமுனை கடற்கரை ஆகியன அங்கு அமைந்துள்ளன.
இம் மாவட்டம் அண்ணளவாக 1237 கிலோ மீற்றர் நிலப்பகுதியையும், 44.3 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இங்கு பிரதான தொழில் விவசாயம் ஆகும். பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதுடன், ஏனையோர் உப உணவுப் பொருட்கள் பயிரிடல், பழங்கள் பயிரிடல், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு ஆகியனவற்றில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மீன்பிடித் தொழிலையும் மக்கள் தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசன மற்றும் விவசாய விருத்தி தொடர்பாக உற்றுநோக்கும் போது, இரணைமடு வாவி மற்றும் நீர்ப்பாசன செயற்திட்டங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. மாவட்டத்தில் வசித்து வருகின்ற விவசாய குடுமபங்களின் எண்ணிக்கை 21,208 ஆகும். அதில் 9495 இரணைமடு செயற்திட்டத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இது மாவட்டத்தின் முழுமொத்த விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையின் 40% ஆகும். மேலும், இரணைமடு நீர்ப்பாசன செயற்திட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை மாத்திரமன்றி உப தானியங்களான கவுபி, பயறு போன்றனவும் பயிரிட்டு ஏனைய பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லக்கூடியளவில் கிளிநொச்சி மாவட்டம் வளம்நிறைந்து காணப்படுகின்றது. மேலும் 464 வாவிகள் கமநல சேவைகள் திணைக்களத்தினால் பேணப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டம்
இது கரையோர மாவட்டமாக விளங்குவதனால், கடல் வளம் மிக்க பிரதேசமாக காணப்படுகின்றது. 08 பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட 7 கிராம அலுவலர் பிரிவுகளும் கரையோரமாகமே அமைந்துள்ளன. இது 119.43 சதுர கி.மீ. கொண்டதாகும்.
இவ் வலயத்தில் வசிக்கின்ற மக்களின் பிரதான ஜீவனோபாய நடவடிக்கைகளில் ஒன்றாக உவர் நீர் மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது. அவ்வாறே மாவட்டத்தின் பெயருக்கு ஏற்றார் போல் கல்லாறில் இருந்து வாழைச்சேனை வரை 229.19 சதுர கி.மீ வலயமைப்பைக் கொண்ட நீண்ட களப்பு அமைந்துள்ளதுடன், இது மாவட்டத்தின் முழு மொத்த நிலப்பரப்பின் 8.70% ஆகும்.
மட்டக்களப்பு புராதன துறைமுக நகரமாக விளங்கியதுடன், அங்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரங்களை இன்னும் காந்தி பூங்காவின் களப்புக்கருகே பார்வையிடலாம். பாசிக்குடா அலையில்லா கடற்கரையாக பிரசித்தி பெற்று விளங்குவதுடன், இது இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஓர் இடமுமாகக் கருதப்படுகின்றது. இம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குகின்ற நெற்செய்கைக்கான வண்டல் மண் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் காணப்படுகின்றது. அத்துடன் இம் மாவட்டம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது.
அம்பாறை மாவட்டம்
இம் மாவட்டம் 205,978 ஹெக்ரயார் நிலப்பரப்பினையும், 19280 ஹெக்ரயார் அளவிலான நிலப்பரப்பில் உள்ளக நீர் தடாகங்களையும் கொண்டமைந்துள்ள இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். வடக்கே பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களையும் கிழக்கே இந்து சமுத்திரத்தையும் தெற்கே ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களையும் மேற்கே பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களையும் எல்லைகளாக கொண்டுள்ள அம்பாறை மாவட்டம் 4415 சதுர கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
அம்பாறை மாவட்டமானது சமய, கலாசார மரபுரிமைகள் தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பிரதேசமாக கருதப்படுகின்றது. பியங்கல, புத்தங்கல ஆகியனவும், ரஜகல, தீகவாபி, மகுல் மஹா விஹாரை, முஹுது மஹா விஹாரை, நீலகல தூபி, குடும்பிகல போன்ற தொல்பொருளியல் பெறுமானம் மிக்க சமயத்தலங்களும் அங்கு தனியிடம் பிடித்துள்ளன.
அவ்வாறே மஹாஓயா மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற சுடுநீர் ஊற்றுக்களும், அழகுமிகு அறுகம்குடா கரையோரமும் கதிர்காம யாத்திரைக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் பாதை யாத்திரை செல்லும் பாதையில் அமைந்திருப்பதன் காரணமாக இப் பிரதேசத்திற்கு அதிகமதிகம் சுற்றுலாப் பணயிகள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.
அவ்வாறே மாவட்டத்தில் இடையிடையே காணப்படுகின்ற (பொல்பெந்த, ஹேனானிகல) ஆதிவாசி கிராமங்கள் அமைந்திருப்பதன் காரணமாக இம் மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட வேறுபட்ட கலாசார விழுமியங்களைக் கொண்டதாக மிளிர்கின்றது. அவ்வாறே அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை, அம்பாறை நகர சபை உட்பட நாமல்ஓயா, உஹன, தமன, மஹா ஓயா, பதியதலாவ, தெஹியத்தகண்டி, லாகுகலை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, ஆலயடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி, எரகம, நிந்தவூர், காரதீவு மற்றும் பொத்துவில் ஆகிய 17 பிரதேச சபைகளைக் கொண்டுள்ளன.
திருகோணமலை மாவட்டம்
நீண்டதோர் வரலாற்று பின்புலத்தைக் கொண்டதும், இயற்கை துறைமுகத்தினால் சூழப்பட்டதும், வர்த்தகம், விவசாயம், கடற்தொழில் ஆகிய பொருளாதார வளமிக்கதும், இயற்கை வனப்புடன் தனிச் சிறப்புப் பெற்று விளங்கும் இடங்களைக் கொண்டுள்ளதுமான திருகோணமலை மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அது, மேற்கே முல்லைத்தீவு மாவட்டத்தையும், மேற்கே அநுராதபுர மாவட்டத்தையும், தெற்கே மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் நீண்ட வரலாற்றுச் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மாவட்டமாகும். இலங்கை வரலாற்றில் அநுராதபுர இராச்சியத்தில் பிரசித்தி பெற்ற இரு நூல்களான மகாவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியவற்றில், ‘கோகண்ண’, ‘கோகர்ண’, மற்றும் ‘கோணகாமக்க’ என திருகோணமலை அழைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை 2,728.8 சதுர கி.மீ. பூராக வியாபித்துக் காணப்படுகின்றது. 11 பிரதேச செயலகப் பிரிவுகளையும், 230 கிராம அலுவலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் அங்கு பிரதானமான தொழில்களாகும். நெய்செய்கை பிரதான பயிர்செய்கையாகும். கந்தளாய் குளம், வெங்கராச குளம், மொரவாவி, மஹாதிவுல் வாவி மற்றும் புறாக்குளம் ஆகியன சில பிரதான குளங்களாகும். அவ்வாறே கந்தளாய், அல்லைக் கந்தளாய் மற்றும் மொரவாவி என்பன மூன்று பிரதான நீர்ப்பாசன செயற்திட்டங்களாகும். கால்நடை வளர்ப்பு பிரதான ஜீவனோபாயமாகும்.
திருகோணமலை மாவட்டம் உலகில் புகழ்பெற்ற கடற்கரையோரமாக விளங்குவதன் காரணமாக சுற்றுலாத் தொழிலிலும் பொருளாதார ரீதியாக இம் மாவட்டம் சிறந்து விளங்குகின்றது எனலாம். மேலும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், இயற்கை துறைமுகம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு டோக்கியோ சீமெந்து போன்ற சர்வதேச கம்பனி, தமது உற்பத்தி மற்றும் விநியோக தொடர்பாக திருகோணமலை நகரை கேந்திரமையமாக கெண்டு தாபிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டம்
வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள குருணாகலை மாவட்டத்தின் விஸ்தீரணம் 4812.7 சதுர கிலோ மீற்றர்களாகும். அதாவது 481270 ஹெக்ரயார்கள் ஆகும். 30 பிரதேச செயலகப் பிரிவுகளையும், 1610 கிராம அலுவலர் பிரிவுகளையும் கொண்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 4432 கிராமங்கள் உள்ளன. 01 மாநகர சபையும், 01 நகர சபையும், 18 பிரதேச சபைகளும் காணப்படுகின்றன.
குருணாலை மாவட்டத்தில் 6 கல்வி வலயங்களும், 875 பாடசாலைகளும் உள்ளன. அதில் 28 தேசிய பாடசாலைகள் ஆகும். மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 20,223 ஆகும். இம் மாவட்டம் 5 மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. அவை வடக்கே அநுராதபுர மாவட்டமும், கிழக்கே மாத்தளை மாவட்டமும், தெற்கே கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களும், மேற்கே புத்தளம் மாவட்டமும் ஆகும். மாவட்டத்தின் தனி அமைவிடம் வடக்கே 228 - 333 ஆள்கூறுக்கும், கிழக்கே 104 - 178 ஆள்கூறுக்கும் இடையே அமைந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பின்புலம் பற்றி உற்றுநோக்கும் போது, குருணாகல் மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட தனிச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது. அதாவது 4 இராச்சியங்களும் அமையப்பெற்றிருந்த இலங்கையின் ஒரேயொரு மாவட்டம் எனும் பெருமை குருணாகலை மாவட்டத்தையே சாரும். பண்டுவஸ்நுவர, குருணாகலை, யாப்பஹுவ, தம்பதெனியா ஆகியன அவ் இராச்சியங்கள் ஆவதுடன், இவ் இராச்சியங்கள் நிலவிய காலப்பகுதியில் புகழ்பெற்ற பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளமைக்கான சான்றுகளும் உள.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் 900 - 2200 மி.லீ. இடைப்பட்ட மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று, தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பிரதானமாக மழைவீழ்ச்சி கிடைப்பதுடன், அதிகளவு மழை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே கிடைக்கின்றது.
புத்தளம் மாவட்டம்
இலங்கையின் வம்சக் கதைகளின் வாயிலாக இந் நிலப் பகுதியான புத்தளம் மாவட்டம் (தம்பபண்ணி) நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளதை அறிய முடிகின்றது. புத்தளம் மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு நிலப்பகுதியாகும். வடக்கே கல்லோயாவையும், கிழக்கே குருணாகலை மாவட்டத்தையும், தெற்கே மா ஓயாவையும், மேற்கே இந்து சமுத்திர கரையோரத்தினையும் எல்லைகளாக புத்தளம் நிர்வாகம் நிர்வாக மாவட்டம் கொண்டுள்ளது. மாவட்டத்தின் நீளம் 120 கி.மீ ஆவதுடன், அதன் அகலம் 50 கி.மீ. ஆகும். 228 கி.மீ. நீளம் கரையோரம், உள்ளக நீரேந்துப் பிரதேசங்களுடன் 3072 சதுர கி.மீ. நிலப்பரப்பு இம் மாவட்டத்திற்குரியதாகும்.
இம் மாவட்டம் தெங்குப் பயிர்செய்கையை அண்டிய உப உற்பத்திகளின் ஏற்றுமதியின் ஊடாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றது. அவ்வாறே முன்னைய காலத்தில் இருந்தே நிலவுகின்ற நீர்ப்பாசன முறைமை காரணமாக நெற்பயிர் செய்கை இங்குள்ள மக்களின் ஜீவனோபாயமாக இருந்து வந்துள்ளது.
அநுராதபுர மாவட்டம்
பல்லின சமயங்களைப் பின்பற்றுகின்ற, பல்லின மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற அநுராதபுர மாவட்டம் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களையும், தெற்கே குருணாகலை, மாத்தளை மாவட்டங்களையும், மேற்கே புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களையும் கிழக்கே பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. மஹா போதி உட்பட அட்டமஸ்தானத்தை முதன்மையாகக் கொண்ட புனிதமான வரலாற்று மரபுரிமைகளைக் கொண்ட இடங்கள் மாத்திரமன்றி மிஹிந்தலை ரஜமஹா விஹாரை, தந்திரிமலை ரஜமஹா விஹாரை, அவுகன சிலை உட்பட வரலாற்றுச் சிறப்புமிக்க பல பௌத்த புனிதத்தலங்களை இந் நகரில் காணக்கூடியதாக உள்ளதுடன், அப் பின்புலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்ந்துள்ளன.
அநுராதபுர மாவட்டத்தின் ஜீவனோபாயமாக விவசாயம் விளங்குவதுடன், நெற்செய்கை பிரதான பயிர்செய்கையாகும். மேலதிக பயிர்களான சோயா, சோளம், கடலை, எள்ளு, பெரிய வெங்காயம் ஆகியவற்றில் இருந்து மாவட்டத்தின் தேவைகள் பூர்த்தி செய்து கொள்ளப்படுகின்றன. சோயா மற்றும் சோளம் தேசிய தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளன. மழைநீர் மற்றும் நீர்ப்பாசன முறைகளின் ஊடாக பயிர்செய்கைக்கான நீர் பெற்றுக் கொள்ளப்பகின்றது. தற்போதைய பொறியியல் துறை கூட வியக்கும் வண்ணம் புராதன நீர்ப்பாசன முகாமைத்துவ தொழிநுட்ப முறைகளடங்கிய இம் மாவட்டம் கலாவாவி, திஸ்ஸவாவி, கண்டி வாவி, அபய வாவி, நாச்சியாதீவு, இராஜங்கனை மற்றும் பதவிய உட்பட 12 பிரதான குளங்களையும், 85 நடுத்தர குளங்களையும், 2974 சிறிய குளங்களையும், நீர்ப்பாசன முறையையும் உள்ளடக்குகின்றது. மிகச் சிறியளவிலான பல குளங்கள் காணப்படுகின்றன. அநுராதபுர மாவட்டத்தின் சனத்தொகை 856232 ஆகும்.
பொலன்னறுவை மாவட்டம்
பராக்கிரம மன்னரின் காலத்தில் இருந்தே நெற்செய்கையில் தன்னிறைவு பெற்ற, இலங்கையின் இரண்டாவது இராச்சியமாக விளங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பொலன்னறுவை மாவட்டம் தற்போது 07 பிரதேச செயலகங்களையும், 295 கிராம அலுவலர் பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டு பொருளாதார மற்றும் அழகியல் வளங்கள் நிறைந்து காணப்படுகின்ற புனித பூமியாக திகழ்வதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு நல்கி வருகின்றது.
இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பொலன்னறுவை மாவட்டத்திற்கு 216 கி.மீ. தூரத்தில் மஹாவலி பள்ளத்தாக்கின் சமவெளிகள் அமைந்துள்ள பொலன்னறுவை நகரம் தற்போதைய பொலன்னறுவை மாவட்டத்தின் பெரு நகரமாகும். பொலன்னறுவை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 337.9 சதுர கி.மீ. ஆகும். வடக்கே 7' 40'' - 8' 21'' அகலக் கோட்டுக்கும், 80' 44'' - 81' 20'' நெடுங்கோட்டுக்கும், 50-500 அடி உயரத்திற்கும் இடையே இம் மாவட்டம் அமைந்துள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் பொலன்னறுவை மாவட்டம் அமைந்துள்ளது. இம் மாவட்டம் பூராகவும் 04 பிரதான வாவிகளும், 03 நடுத்தரளவிலான வாவிகளும், 62 சிறு குளங்களும், பயன்பாடற்ற 35 சிறு குளங்களும்,123 அணைக்கட்டுக்களும், செயற்பாடற்ற 6 அணைக்கட்டுக்களும் காணப்படுகின்றன.
பதுளை மாவட்டம்
பதுளை மாவட்டச் செயலகம் மூலம் 15 பிரதேச செயலகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அந்த 15 பிரதேச செயலகங்களில் 567 கிராம அலுவலர் பிரிவுகளும், அக் கிராம அலுவலர் பிரிவுகளுள் 1996 கிராமங்களும், தமிழ் மக்கள் வசித்து வருகின்ற 186 தோட்டங்களும் (பெருந்தோட்ட) அமைந்துள்ளன. 14 பிரதேச செயலகங்கள், 02 நகர சபைகள் மற்றும் 01 மாநகர சபை என்பன இம் மாவட்டத்தில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக இணைந்து செயற்படுகின்றன. 227,428 குடும்பங்களுக்கு அதிகமாக அம் மாவட்டத்தில் வசித்து வருவதுடன், அக் குடும்பங்கள் மொத்தச் சனத்தொகை 811,758 ஆகும். இதில் 406,623 பேர் ஏதாவதொரு தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், எதுவித தொழில்களிலும் ஈடுபடாதோர் (தொழில் படையணிக்குரிய) 16,891 ஆவர். பதுளை மாவட்டத்தில் வசிக்கின்ற பெரும்பாலோனோரின் ஜீவனோபாயம் விவசாயம் ஆகும். ஆதலால், குறைந்த வருமானம் பெறுகின்ற மக்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அரசாங்கத்தின் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உதவி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 59,273 ஆகும். அத்துடன் 17,399 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
மொனராகலை மாவட்டம்
முன்னர் வெல்லஸ்ஸ என அழைக்கப்பட்ட மொனராகலை மாவட்டம் இலங்கையின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பக்கமாக ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 5959 சதுர கி.மீ. ஆவதுடன் இது இலங்கையின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். தனி அமைவிடமாக வடக்கே 6° 17' - 7° 28' அகலக்கோட்டுப் பாகைக்கும், கிழக்கே 80° 50' - 81° 35' நெடுங்கோட்டுப் பாகைக்கும் இடையே அமைந்துள்ள இம் மாவட்டம் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் ஒரு நிலப்பகுதியாகும். இது கிழக்கே மற்றும் வடக்கே அம்பாறை மாவட்டத்தையும், தெற்கே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தையும், தென்மேற்குப் பக்கமாக இரத்தினபுரி மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளன. இம் மாவட்டம் 11 பிரதேச செயலகங்களையும், 319 கிராம அலுவலர் பிரிவுகளையும், 1324 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளன.
ஒட்டுமொத்த மொனராகலை மாவட்டமும் காலநிலை வலயங்களாக பிரிக்கப்பட்டதற்கிணங்க, இம் மாவட்டம் இடைநிலைக் காலநிலை வலயத்திற்கும் உலர் வலயத்திற்கும் உட்பட்டதாக விளங்குகின்றது. மாவட்டத்தில் 70% வீதம் உலர் காலநிலை வலயத்திற்கு உரித்தாவதுடன், இதன் யாதெனில் மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள மரகல மலையை அண்டிய பிரதேசம் ஈர வலய காலநிலை இயல்புகளை வெளிக்காட்டுகின்றது. இது இந்நாட்டில் அமைந்துள்ள சிறப்புமிக்க காலநிலை வலயமாகும். மாவட்டத்தின் பொதுவான வருடாந்த மழைவீழ்ச்சி 1625 மி.மீ. ஆவதுடன் மாவட்டத்தின் மத்திய வெப்பநிலை 26°C ஆகும்.
இரத்தினபுரி மாவட்டம்
இலங்கையின் தென்மேற்குப் பக்கமாக அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தின் அமைவிடம் வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சிறப்புற்று விளங்குவது மாத்திரமன்றி அங்கு வசித்து வருகின்ற மக்களின் இருப்பு, பொருளாதா வளர்ச்சி என்பனவற்றிலும் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. வடக்கே 6° இலிருந்து 7° இற்கிடையிலான நில நேர் கோட்டுக்கும், கிழக்கே 80° இலுருந்து 81° இடைப்பட்ட நில நிரைக் கோட்டுக்கும் இடையே அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டம் 3275.4 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டதாகும். இது, வடக்கே கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களையும், தெற்கே காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களையும், மேற்கே கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களையும், கிழக்கே பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள்களுக்கு அமைவாக புராதன மனிதன் அதாவது பலாங்கொடை மனிதன் பற்றியதான உக்கிப்போன எழும்புக்கூடு ஒன்று இரத்தினபுரி மாவட்டத்தின் பட்டதொம்பலான மற்றும் பெல்லன்பெந்தி பெலஸ்ஸ ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அநுராதபுர இராச்சியத்தின் சில இடங்களில் இருந்து கிடைத்த பிராமண எழுத்து வகைக்கு உட்பட்ட எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டுக்களும் இப் பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், எம்பிலிபிட்டிய கல்தொட்ட போன்ற பிரதேசங்களில் இருந்து கிடக்கப் பெற்ற ஏனைய இடிபாடுகளில் இருந்தும் இரத்தினபுரி மாவட்டத்தின் வல்லாற்றுப் பெறுமானம் புலப்படுகின்றது.
கண்டி இராச்சியத்தில் இரத்தினபுரி மாவட்டம் 6 கோரளைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. அவை குருவிட்ட, நவதுன், அட்டகலன், குக்குலு, கட்வத்மெத மற்றும் கொலன்ன ஆகியனவாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் கொடி தங்க நிறத்தைக் கொண்டதாகும். சப்ரகமுவ புராதன கொடியினால் தயாரிக்கப்பட்ட இதில் அலங்கார சிவப்பு விளம்பும் மஞ்சள் நிற பின்புலமொன்றும் தென்படுகின்றது. மஞ்சள் நிறம் சிவபெருமானுக்குரிய நிறமாகும். மாவட்டத்தில் உள்ள பிரதான புனிதத் தலமாக சிவனொளிபாத மலையே மிளிர்கின்றது. ஆண்டின் உந்துவப் போயா தினத்துடன் ஆரம்பமாகும் சிவனொளிபாத யாத்திரைக் காலம் அடுத்துவரும் ஆண்டின் வெசாக் முழுநோன்மதித் தினம் வரையில் இருக்கும். நாட்டில் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் இக் காலப் பகுதியில் சிவனொளிபாதமலையைத் தரிசிப்பதற்காக இங்கு வருகின்றனர். இரத்தினபுரி சிவன் கோயிலும் அவ்வாறான வரலாற்றுப் பெறுமானம் மிக்க இன்னொரு முக்கிய புனிதத்தலமாக விளங்குகின்றது.
கேகாலை மாவட்டம்
சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டம் இலங்கையின் மத்திய மலைநாட்டின் தென் மேற்கு சமதரை பிரதேசத்துக்கு இடைப்பட்டதாக அமைந்துள்ள கண்கொள்ளாக் காட்சி தரும் சுற்றுச் சூழலைக் கொண்டமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். அன்று றுஹுனு, மாயா, பிஹிட்டி என மூன்றாகப் பிரித்து மூன்று சிங்கள மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்தனர். அன்றைய மாயா இராச்சியத்துக்கு உரிய பிரதேசமே இப்பிரதேசமாகும்.
நிர்வாக ரீதியாக இம் மாவட்டம் 11 பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டம் வடக்கே 6.50 -7.20 நில நேர்கோட்டுக்கும் கிழக்கே 80.10 - 80.35 இடைப்பட்ட நில நிரைக் கோட்டுக்கும் இடையே அமைந்துள்ளது. வடக்கே குருனாகலை மாவட்டத்தையும், தெற்கே இரத்தினபுரி மாவட்டத்தையும், கிழக்கே கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களையும், மேற்கே கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களையும் எல்லைகளாக கொண்டுள்ளது. 48 கிலோ மீற்றர்களைக் கொண்ட வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் வியாபித்துக் காணப்படும் இப்பிரதேசம் 1692.8 (645 விஸ்தீரணம்) விஸ்தீரணத்தைக் கொண்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் அரசியல், பொருளாதாரம், சமூக, சமய மற்றும் பண்பாட்டு ரீதியான தகவல்களை ஆராயும் போது கேகாலை மாவட்டம் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையின் மிகச் சிறந்த பென்சிற்கரிப் படுகைகள் கேகாலை மாவட்டத்தின் போகலையில் அமைந்துள்ளது.
கேகாலை மாவட்டம் தென்மேற்கு ஈரவலயத்திற்கு உரியதாவதுடன், அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெப்பமும் கிடைக்கின்ற ஒரு பிரதேசமாகும். பருவப்பெயர்ச்சி, புடைப்பெயர்ச்சி மற்றும் சூறாவளி ஆகியன மூலம் மழை கிடைப்பதனால் ஆண்டு முழுவதும் மழைவீழ்ச்சியும் காணப்படுகின்றது.