2021 ஏப்ரல் மாதத்திற்கான மாவட்ட செயலாளர் மாநாடு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் நில மெதுர வளாகத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மற்றும் செயலாளர் திரு. என்.எச்.எம். சித்ரானந்த தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்து கொன்ட கௌரவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்கள் கருத்து தெறிவிக்கையில் நிகழ்காலத்திற்குப் பொருத்தமான புதிய நிருவாக கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டிய தேவையை வழியுறுத்தினார் மேலும் தற்போதைய அபிவிருத்திச் செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ள நிருவாக மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார். அத்துடன் பொது மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகானும் போது மாவட்ட செயலாலர்களின் நேரடி பங்களிப்பின் அவசியம் பற்றியும் உரையாற்றினார்.

 

சமுதாயத்தில் காடழிப்பு தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளையும்இ இதுபோன்ற காடழிப்பு நடைபெறுகிறதா என்பதையும் அரசாங்க அதிபர்கள் ஆராய்ந்து, தங்கள் அதிகார எல்லைக்குள் காடழிப்பு நடைபெறுகிறதா என்பது குறித்து கிராம நிலதாரிகளிடமிருந்து அறிக்கைகளுக்கு அமைவாக அவ்வாரான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சாமல் ராஜபக்ஷ கூறினார்.

மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுகின்ற இம் மானாட்டில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) கே.ஜி. விஜேசிறிஇ மேலதிக செயலாளர் (உள்நாட்டலுவல்கள்) கே.ஜி. திரு.தர்மதிலக மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

20 20

20 20

20 20

20 20

20 20

20 20

20 20