தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ .2000 உதவித்தொகையை இன்னும் பெறாதவர்கள் பிரதேச செயலகத்தில் முறையிடலாம் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெறிவிக்கின்றது.

தங்கள் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மூலம் முறையீடுகள் விரைவாக செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா மேலும் தெரிவித்தார்

 

தகுதிவாய்ந்த குடும்பங்களில் 50 சதவீதம் பேருக்கு ஏற்கனவே ரூ .2000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டை மூடியதால் வருமான ஆதாரங்களை இழந்த மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எந்த கொடுப்பனவையும் பெறாத குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தகைய 18 இலட்சம் குடும்பங்கள் நாடளாவிய ரீதியில்  அடையாளம் காணப்பட்டுஇ அந்த குடும்பங்களுக்கான உதவித்தொகை ரூ .2000 மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களால் ஊடாக வழங்கப்படுகிறது.